St. Anthony Devotion (Day 16) in Tamil

பதினாறாம் நாள்

அர்ச். அந்தோனியாரும், திருக் குழந்தையான சேசுநாதரும்

அர்ச். பிரான்சீஸ்கு சபை மடத்துப் புத்தகங்களில் எழுதியிருக்கப்பட்ட தென்னவெனில், அர்ச். அந்தோனியார் பரலோக பாக்கியத்தை நாடி அதற்காகவே தமது சீவியகாலத்தைச் செவழித்து வருகையில், இந்தக் கண்ணீர்க் கணவாயிலேயே திருக்குழந்தையான சேசு நாதரைத்தமது கரங்களில் ஏந்தி அவரைத் தரிசிக்கப் பாக்கியம் பெற்றார் என்று எழுதப்பட்டிருக்கின்றது.

அர்ச். அந்தோனியார் அப்போஸ்தலர்களைப் போலச் சீவித்து வந்தார். அவர் லிமுசின் நாட்டின் ஒரு சிற்றூருக்குப் போனபோது அவ்விடத்திலிருந்த ஒரு மகராசன் அவர் தன்னுடைய விஸ்தாரமான வீட்டில் ஒரு அறையில் தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். கட்டிடத்தில் தனித்திருந்த ஒரு அறை அவர் செபம் பண்ணுவதற்கும், தியானம் பண்ணுவதற்கும் சந்தடி யில்லாமல் இருக்குமென்று நினைத்து அவருக்கு அந்த அறையைக் காட்டினான்.

அர்ச்சியசிஷ்டவர் அதில் வாசஞ்செய்துவந்தார். அவர் தியானம் செய்து கொண்டிருக்கும்போது வீட்டுக்குச் சொந்தக்காரன் தன் தோட்டத்தைச் சுற்றிப் போய்ப் பார்ப்பான். அப்படியிருக்க ஒருநாள் அவன் அர்ச்சிபசிஷ்டவர் என்ன செய்கிறார் என்று பார்க்க, அவரிருந்த அறைப்பக்கமாய்த் திரும்பினான் அப்போது சன்னல் வழியாய் அவள் கண்ட ஆச்சரியமான காட்சியாவது: அதிசயிக்கத்தக்க அழகுள்ள ஒரு குழந்தை அர்ச்சியசிஷ்டவருடைய கரங்களிலிருக்கிறதையும். அவரோடு கொஞ்சிக் குலாவி இளையாடுகிறதையும், அவரும் அக்குழந்தையுடன் கொஞ்சி அதை முத்தமிடுகிறதையும் வெரு ஆச்சரியத்துடன் கண்டு பார்வையை வேறு பக்கம் திருப்ப முடியாமல் ஒரே பார்வையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தையின் சுந்தரவடிவைக் கண்டு அக்குழந்தை யார்? எப்படி அவ்விடம் வந்தது எங்கிருந்து வந்தது என்று பல யோசனை செய்தான். வீட்டுக்குச் சொந்தக்காரன் பார்த்துக்கொண்டிருக்கிறா னொன்று குழந்தையே அந்தோனியாரிடத்தில் சொல்லி மறைந்தது ஆனதால் அர்ச்சியசிஷ்டவர் வெகு நேரம் வேண்டிக்கொண்ட பிறகு அவனை அழைத்து: நாம் உயிரோடிருக்கும் பரியந்தம் அவன் கண்டதை ஒருவருக்கும் வெளிப்படுத்தக் கூடாதென்று அவனுக்கு அறிவித்தார். அர்ச்சியசிஷ்டவர் மரித்த பிற்பாடு. ஆனந்தக் கண்ணீர் சொரிந்துகொண்டு அவன் தான் பார்த்த அதிசயத்தை வெளிப்படுத்தினான்.

ஏறக்குறைய எண்ணூறு வருஷ காலங்களாய் படங்களிலோ, சித்திரங்களிலோ, சுருபங்களிலோ. இந்த அற்புதமான காட்சியை நினைப்பூட்ட அர்சி அந்தோனியார் தயது கரங்களில் திருக்குழந்தையான சேசுநாதரை எந்தினபிரகாரம் காண்பிக்கப்பட்டு வருகிறார். அர்ச் ஞானப்பிரகாசியாருக்கும், அர்ச், ஸ்தனிஸ்லாசுக்குட் அர்ச்சியசிஷ்ட பட்டம் கொடுக்கிற வரையில் அர்ச். சூசையபரைப்போல் திருக்குழந்தையை ஏந்திக்கொண்டிருக்கிற விசேஷ மகிமை அர்ச். அந்தோணியாருக்கு மாத்திர தாளிருந்தது. விழுசின் நாட்டில் அர்ச். அந்தோனியார் சீவித்து வந்தவரையிலும் சிற்றூர்களுக்கெல்லாம் போய் வேது வாக்கியத்தையும் புதுமைகளையும் விதைத்து வந்தாரென்று சொல்லலாம். அந்தோனியார் ஒருநாள் ஊருக்குத் தூரத்திலிருந்த ஒரு மைதானத்தில் பிரசங்கம் செய்ய போனபோது அவருடன் சென்ற திரனான சனங்களோடு ஒரு பெண்பிள்ளை தானும் போக ஆசித்தாள். ஆனால் நல்ல மனசில்லாத அவன் புருஷன் தடங்கல் செய்தபடியால் அந்தப் புண்ணியவதி பிரசங்கம் நடக்கும் ஸ்தலத்தையாவது பார்த்து ஆசை தீரலாம் என்று வீட்டின்மேல் ஏற்ப் பார்த்தாள் பிரசங்கம் நடந்த ஸ்தலம் ஏறக்குறைய இரண்டு மைல் தூரமிருந்தபோதிலும், பிரசங்கம் தெளிவாய்த் தன் செவியில் விழுந்தபடியால், அதைக் கேட்டுக்கொண்டே விருந்தான். புருவுன் அவளை நோக்கி நீ அவ்விடத்தில் என்ன செய்கிறாயென்று கேட்க, பிரசங்கங் கேட்கிறேன் என்றாள். அவன் நகைத்து, பைத்தியக்காரி என்று அவனை ஏசினாலும், தானும் அவரிருந்த இடம் போனபோது பிரசங்கம் தெளிவாய் அவ்வளவு தூரங்கேட்பதைக் கண்ட அவன் அன்று முதல் மனத் திரும்பி, அர்ச்சியசிஷ்டவருடைய பிரசங்கத்தைக் கேட்கப் போகத் தவறாதிருந்தான். அந்தோனியார் சிலுவை அடையாளம் வரைந்து அநேகம் புதுமைகளைச் செய்தார். சேகநாதருடைய திருநாமத்தை உச்சரித்து அநேக அற்புதங் களை நிறைவேற்றினார். அத்திரு நாமத்தைக் கொண்டு நமதாத்துமங்களிலுண்டான தூர்க்குணங்களை அந்தோனியார் தீர்க்கும்படி நாம் அவரை மன்றாட வேண்டியது. ஆனதால் நாமும் அடிக்கடி பூலோக திரித்துவத்தின் நாமத்தை, சேக மரி சூசையென்னும் திரு நாமங்களை உச்சரித்து, நமக்கு வேண்டிய உதவி சகாயங்களைக் கேட்கக்கடவோம்.

செபம்

ஓ மகா மகிமை பொருந்திய அர்ச்சியசிஷ்டவரே உமதிடத்தில் விளங்கின தேவசிநேகமிகுதியா திருக்குழந்தையான சேசுநாதரை உமது கரங்களில் ஏந்தட பாத்திரமான நீர், சகலவித ஆயத்தத்தோடு தேவநற்கருணையில் நாங்கள் அவரை உட்கொள்ளவரமடையக் கிருபை செய்தருளும் ஆமென்.

நற்கிரியை: அரிச். அந்தோனியார் சுருபத்தையாவது படத்தையாவது சிறப்பிக்கிறது.

மனயல்லயச் செபம்: சேசு மரி சூசையே, எங்களை இரட்ஷியுங்கள்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started