St. Anthony Devotion (Day 15) in Tamil

பதினைந்தாம் நாள்

அர்ச். அந்தோனியாரும் பிள்ளைகளும்

சிறு பிள்ளைகளைத் தம்மிடத்தில் வரவிடச் சொல்லி அவர்களை ஆசீர்வதித்த நமது திவ்விய இரக்ஷகரான சேசுநாதசுவாமியைச் சகல காரியங்களிலும் கண்டுபாவித்து நடந்துவந்த அர்ச். அந்தோனியார் சிறு பிள்ளைகள் மட்டில் விசேஷ பட்சங் காண்பித்து அவர்களை ஆசீர்வதித்து வருவார். பிள்ளைகளும் அவரைக் கண்டமாத்திரத்தில் ஓட்டமாய் ஓடி அவரைச் சூழ்ந்துகொண்டு அவருடைய அங்கியைப் பிடித்துக்கொள்ளுவார்கள். அர்ச்சியசிஷ்டவர் தங்கள் பிள்ளைகள் மட்டில் இவ்வளவு பட்சமாயிருப்பதைக் கண்ட தாய்மாரும் அவருக்கு நன்றியறிந்திருப்பார்கள். பிள்ளைகள்மட்டில் பிரியமாயிருந்த அவர் லிமோஜ் பட்டணத்தில் அவர்களுக்கு அநேக வித நன்மை செய்து வந்ததுமல்லாமல் அவர்கள் விஷயத்தில் அநேகம் புதுமைகளையும் செய்துவந்தார்.

ஒருநாள் அர்ச்சியசிஷ்டவர் ஒரு சிற்றூரில் பிரவேசித்துப் தவறிப் பிரசங்கம் பண்ணப் போகையில் தன் பிள்ளையைக் குளிப்பாட்டுகிறதுக்காக அடுப்பில் ஒரு பெருங் கொப்பரையில் தண்ணீர் சுடவைத்திருந்த தாய், பிரசங்கம் போகுமேயென்கிற ஏக்கத்தினால் அவசரமாய்க் குளிக்கிற தொட்டியில் தன் பிள்ளையைப் போடாமல் கொதிக்கிற தண்ணீர் கொப்பரையில் போட்டுவிட்டு ஒன்றும் யோசிக்காமல் கோயிலுக்குப் போய்ப் பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்தாள். பிரசங்கம் முடிந்தபிறகு மற்றவர்கள் பிள்ளை எங்கே என்று அவளைக் கேட்டபோதுதான், பிள்ளையை அவசரத்தின் மேல் கவனமின்றி கொதிக்கிற தண்ணீர் கொப்பரையில் போட்டுவந்தது அவள் ஞாபகத்துக்குவர, அழுது அலறி ஓட்டமாய் வீட்டுக்கு ஓடிப் பார்க்கையில் கொதி தண்ணீர் கொப்பரையில் தன் பிள்ளை சிரித்த முகத்தோடு விளையாடிக்கொண்டிருக்கிறதைப் பார்த்தாள். ஞான திருஷ்டியால் பிள்ளைக்கு வந்ததை அறிந்த அந்தோனியார் அற்புதமாய் அந்தப் பிள்ளையைக் காப்பாற்றினார்.

மற்றொருநாள் தூங்கிக்கொண்டிருந்த தன் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளும்படி வேலைக்காரியிடத்தில் சொல்லி விட்டுத் தாய் அர்ச். அந்தோனியாருடைய பிரசங்கத்தைக் கேட்கும்படி போயிருந்தாள். வேலைக்காரி சற்று நேரம் வெளியில் போய்ப் பேசிக்கொண்டிருந்தபோது, பிள்ளை எழுந்து அடுத்தாற்போலிருந்த கொதிக்கிற தண்ணீரில் விழுந்தது. தாய் திரும்பிவந்தபோது தன் பிள்ளை மரித்ததைக் கண்டு பிரலாபித்தழுது பிள்ளையைத் தூக்கி அடுத்த அறையிற் கிடத்தி, அன்று அந்தோனியாரைத் தன்னுடைய வீட்டுக்குச் சாப்பிட வரும்படி அழைத்திருந்தபடியால், அவர் வந்தபோது அவருக்குச் சாப்பாடு பரிமாறினாள். ஞான திருஷ்டியினால் நடந்த சங்கதியை அறிந்த அந்தோனியார் பழம் ஒன்றுமில்லையோவென்று கேட்க, பழம் ஒன்றுமில்லையென்றபோது, அடுத்த என்றார்; தாயானவன் மிருந்த தூரத்தோடு பிள்ளையைக் கிடத்தியிருந்த அறைக்குள் பிகேல்த்தியாது. மரித்த பிள்ளை எழுத்து உட்கார்ந்து தன்னைச் சந்ற்றும் இருந்த பழங்களைத் தன் இரு கககளிலும் எடுத்து விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டு ஆனந்தக் காண்களி சொரிந்து பிள்ளையைத் தூக்கிவந்து அந்தோனியார் பாதத்தில் விழுந்து அவருக்கு நன்றியறிதல் செலுத்தினால்,

பிள்ளைகள் விஷயத்தில் அரச்சு, அந்தோனியார் செய்து புதுமைகளை எல்லாம் நாம் சொல்லுந்தரமல்ல. தங்கள் பிள்ளைகளுடைய ஆத்தும சரீரத்தைப்பற்றிக் கவலைப்படுகிற தாய்மாருக்கு நாம் சொல்லுவதென்னவெளில், அரசி, அந்தோனியாரிடத்திற் போங்கள். வாலிடத்தாய்மா உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றவும், வாலிப ஸ்திகளை உங்களுக்கு பிள்ளை இல்லாக் குறைகயைத் தீர்த்து உங்களைச் சந்தோஷப்படுத்தவும் புதுமை செய்கிறவரான அரிச். அந்தோனியாரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளைச் சன்மார்க்கத்திலும் பண்ணிய வழியிலும் வளர்ப்பதாக அவருக்கு வார்த்தைப்பாடு கொடுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறினால் எளியவர்களுக்கும், தாய் தகப்பனற்ற பிள்ளைகளுக்கும் தர்மம் செய்வதாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மன்றாட்டுகளை பதுமை விளங்கு கிறவரான அரிச், அந்தோனியார் தயவாய்க் கேட்டு உங்கள் குறைகளைத் தீர்த்து நீங்கள் அமைகிழும்படி கிருபை செய்வார்.

செபம்

மகா மேன்மை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, மாசற்ற தனத்தின் ‘காவலானவரே, அநியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தாயின் மரியாதை யைக் காப்பாற்ற மாசற்ற குழந்தை பேசும்படி செய்திரே. இவ்வலகத்தில் எங்களுக்கு நேரிடும் துன்பங்களை நாங்கள்: பொறுமையோடு சகித்து, எங்கள் ஆத்தும பரிசுத்தத் தனத்தைக் காப்பாற்ற எங்களுக்குக் கிருபை செய்தருளும்.

நற்கிரியை

 ஒரு அநாதைப் பிள்ளையை ஆதரிக்கிறது. மனவல்லயச் செபம்: பிள்ளைகளை வெகு அன்பாய் நேசித்தவரான அரிசி அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started