Devotion to St. Antony in Tamil Day 14

பதினான்காம் நாள்

ஆரில் (Arles) பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

அர்ச். அந்தோனியார் எவ்வளவுதான் தாழ்ச்சியாயிருந்த போதிலும் அவர் செய்த பிரசங்கங்களினாலும் புதுமைகளி னாலும் அவருடைய பெயர் எங்கும் பிரபலியமாய்ப் போனது. பூர்ஜ் பட்டணத்துச் சங்கத்தில் அவர் காண்பித்த விடாமுயற்சி எல்லோருக்குமே தெரிந்திருந்தபடியால் ஆர்ல் நகரத்திற்கூடின சங்கத்துக்குப் பெரியவர்களால் அழைக்கப்பட்டு அவரே அவர்ச் சங்கத்திற் பிரசங்கஞ்செய்ய நியமிக்கப்பட்டார். அந்தப் பிரசங்கத்தைத் துவக்கும்போது., யூதரின் ராசாவான சேசு நசரேயன் என்னும் வாக்கியங்களை உச்சரித்து அந்த வாக்கியங்களின் பேரில் அமிர்தமான பிரசங்கம் செய்தார். அர்ச்சியசிஷ்டவர்கள் எவ்வளவுக்குத் தங்களைத் தாழ்த்துகிறார்களோ, அவ்வளவுக்குச் சுவாமி அவர்களை மகிமைப்படுத்துகிறதைக் கண்டுவருகிறோம்.

அர்ச். பிரான்சீஸ்கு, அர்ச். அந்தோனியார் வேத சாஸ்திரங்களைத் தமது சந்நியாசிகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று கொடுத்த கட்டளைக்குப் பிறகு அந்தோனியாரைப்பற்றிக் கொஞ்சமாவது கவலையெடுத்துக் கொள்ளவேயில்லை. ஆனால் அர்ச். பொனாவெந்தூர் சொல்லுகிற பிரகாரம், ஆர்ல் நகரத்துச் சங்கத்தில் கூடியிருந்த சகோதரர்களுக்குச் சேசுநாதர் பாடுகளின் பேரில் அந்தோனியார் வெகு உருக்கமாய்ப் பேசும்போது, பக்தியுள்ள மோனால்து (Monald) என்னும் சந்நியாசியார் தேவ ஏவுதலால் தூண்டப்பட்டு கதவின் பக்கமாய்ப் பார்க்க, அங்கே பரிசுத்த பிதாவான பிரான்சீஸ்கு பூமிக்கு மேல் அந்தரமாய் நின்று இரு கரங்களையுஞ் சிலுவை போல நீட்டி சங்கத்தாரை ஆசீர்வதிப்பதைக் கண்டார்.

சிலுவைதான் அர்ச். பிரான்சீஸ்குவினுடைய ஏக புத்தகமாயிருந்தது. சேசுநாதசுவாமியுடைய பாடுகளின்பேரில் அர்ச். அந்தோனியார் பேசும்போது பரிசுத்த பிதா தோன்றியதால் ஐந்து காய வரம்பெற்ற தம்மைப்போலவே அர்ச். அந்தோனியாரும் அவருள்ளத்தில் பாடுகளின் மேல் பக்தி அதிகரிக்கும்படியாகவும், தாம் மரிக்கும்போது பார்க்கக் கூடாததாலும் அவருக்குத் தம்மைக் காண்பிக்கச் சித்தமானார்.

ஆர்ல் நகரத்துச் சங்கம் முடிந்தபிறகு விமுசின் நாட்டு மடத்துக்குச் சிரேஷ்டராக நியமிக்கப்பட்டார். ஆ! பாக்கியம் பெற்ற தேசம்! அவ்விடத்தில் அவர் இருந்த சிறிது மாதங் களுக்குள்ளாக எத்தனையோ புதுமைகள் எவ்வளவோ ஆச்சரியமான காரியங்களைச் செய்தார். எழுநூற்றாண்டு களுக்குப் பிறகும் இன்னும் அத்தேசத்தில் அவர் அக்காலத்திற் செய்த ஆச்சரியமான காரியங்களின் அடையாளங்களைக் காணலாம்.

அவர் அநேக விடங்களில் மடங்களை ஏற்படுத்தினார். லிமோஸ்பட்டணம் வந்து சேர்ந்த உடனே மடத்திலேயிருந்த சகோதரர் ஒருவர் உள்ளத்தில் பசாசினால் உண்டான தந்திரங்களைக் காட்சியிற் கண்டு அந்தச் சகோதர அழைத்து அவனுடைய வாயைத் தமது கைகளால் திற இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக்கொள் என்று சொல் அவன் வாயில் ஊதினார். இடி விழுந்தது போல வா சந்நியாசி அவர் பாதத்தில் மூர்ச்சையாகி சிறிது நேர பொறுத்து நிலைத்திருந்தார். எழுந்து சந்நியாசத்தில் உறுதியாக இருந்தார்.

அர்ச்சியசிஷ்டவர் எப்போதும் இருப்பு ஒட்டியாணம் கட்டியிருந்தார். அதில் ஒரு பாகம் லிமோஜ் பட்டணத்து மடத்தில் புனிதமாகக் காப்பாற்றப்பட்டு வருகின்றது. அ தமது யாத்திரைகளில் தமது செப புத்தகமும், தபசுக்கடுத்த எத்தனங்களும், தமது பிரசங்கப் புத்தகங்களும் மாத்திரந்தாள் கொண்டுபோவார். மற்ற யாதொன்றும் எடுத்துப் போனவரல்ல. பசியோ, தாகமோ சகலமும் பொறுமையோடு சகித்தார். புறத்தியார் தர்மமாய்க் கொடுக்கும் உரொட்டியில் கொஞ்சஞ் சாப்பிடுவார். அர்ச். பிரான்சீஸ்குவை உத்தம விதமாய்க் கண்டு பாவித்து தன் சீவியகால முழுமையும் தரித்திரம் அனுபவித்தார். இதெல்லாம் வாசிக்கிற நாம், நமது சீவியகாலத்தில் எவ்வளவு சுகம், பெருமை, சிலாக்கியம் தேடுகிறோம் என்று நன்றாய் யோசித்துப் பார்த்து, அவையாவையும் வெறுத்துச் சிலுவையையே பிரதானமாய் எப்போதும் நேசித்து வந்த அர்ச். அந்தோனியாரைக் கண்டுபாவித்து நடக்கக் கடவோம்.

செபம்

மகா வணக்கத்துக்குரிய அர்ச். அந்தோனியாரே, உமது சிறு பிராயமுதலே செபத்துக்கும் தவத்துக்கும் உம்மைத்தானே முழுமையும் ஒப்புக்கொடுத்தீரே, அர்ச், பிரான்சீஸ்கு சபையிலுட்பட்டு, உத்தம சந்நியாசியாகி, ஆஸ்தி பாஸ்திகளையும் உலக சுக செல்வங்களையும் வெறுத்தீரே. உமது கை திரவியமாகிற சேசு கிறிஸ்துநாதரைப் பின் சென்றதனால் அவருடைய அநுக்கிரங்களை அடைந்த நீர், எங்களையும் எங்கள் ஆஸ்தியையும், எங்கள் உத்தியோகங் களையும் காப்பாற்றி, நாங்கள் எப்போதும் எவ்விஷயத்திலும் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்த மனதோடு அவருடைய சித்தப்பிரகாரம் நடந்துவரக் கிருபை அடைந்தருளும். ஆமென்.

நற்கிரியை: பிச்சை கொடுக்கிறது.

மனவல்லயச் செபம்: தரித்திரத்தை நேசித்தவரான அர்ச், அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started