St. Antony Devotion in Tamil (Day 5)

ஐந்தாம் நாள்

-அர்ச். அந்தோனியாருக்கு மரோக்கு தேசத்தில் நடத்த நிகழ்ச்சிகள்

சர்வேசுரனுடைய சித்தத்தை ஆசைப்பற்றுதலோடு நிறைவேற்றுகிறதே உத்தம குணம் எனப்படும் என்கிறார் நம் அர்ச்சியசிஷ்டவர். அர்ச். அந்தோனியாருடைய பக்தியுள்ள ஆசை நிறைவேறுகிறதாயிருந்தது. அவர் அர்ச். அகுஸ்தீன் மடத்தை விட்டுப் போனபோது அம்மடத்துச் சந்நியாசியார் ஒருவர் அவரை நோக்கிப் பரிகாசமாக, எங்களை விட்டுத் தூரமாய்ப் போய்த்தான் அர்ச்சியசிஷ்டவர் ஆகப்போகிறீர் என்றார். அதற்கு அந்தோனியார் மறுமொழியாகத் தாழ்ச்சியோடு சொன்னதாவது: “என் சகோதரரே, நான் அர்ச்சியசிஷ்ட பட்டம் பெறுவதை நீர் கேள்விப்படும்போது அதற்காக நீர் சர்வேசுரனுக்குத் தோத்திரஞ் செலுத்துவீர்” என்றார்.
தாம் ஆசித்த காரியம், சர்வேசுரனுடைய வேதத்துக்காகத் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி வேதசாட்சியாகப் போகவேண்டுமென்று எண்ணின எண்ணம் நிறைவேறுங் காலம் சமீபித்திருக்கிறதென்று கண்ட அந்தோனியார் மிக்க சந்தோஷத்தோடு தான் பிறந்த நாட்டையும் உற்றார் பெற்றார் உறவின் முறையாரையும் சிநேகிதரையும் விட்டுப் புறப்பட்டு கப்பலேறி காற்றென்றும் அலையென்றும் பாராமல் கடலைக் கடந்தார். போகிற வழியில் செபத்திலும் தியானத்திலும், தபசிலும் தன்னைத்தானே தான் பெறவிருக்கும் பெரும் பாக்கியத்துக்குப் பாத்திரவானாகும் படியாக தயாரிப்பு செய்துவந்தார்.
அவர் வேதசாட்சி முடி அடைய விரும்பிய தேசம் வந்து சேர்ந்தபோது அத்தேசத்து உஷ்ணந் தாளமாட்டாமல் கடின வியாதியாய் விழுந்து, படுக்கையாய்ச் சில மாதங்கள் இருந்ததைக் கண்ட பெரியவர்கள் அவர் போர்த்துகல் தேசம் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டார்கள். வேதசாட்சி முடியை வெகு ஆவலோடு தேடி வந்த அவர் சர்வேசுரனுடைய சித்தம் வேறாகையால் அமைந்த மனதோடு திரும்பினார், அவருடைய பிதாவான அர்ச். பிரான்சிஸ்கு அநேகம் பாவிகளையும் பிரிவினைக்காரரையும் மனந்திருப்பி ஆயன் மந்தையிற் சேர்த்த வண்ணம் அந்தோனியாரும் செய்ய நியமித்திருந்தார் சர்வேசுரன்.
கப்பலேறி எஸ்பாஞா தேசத்தை நாடிச் செல்லுகையில் பெருங்காற்று எழும்பி கப்பல் அலைமோதி கடலில் புதைக்கப்படும் ஆபத்தான நிலையில் அந்தோனியார் ஆதிபரனுடையவும், சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய கன்னி மாரியம்மாளுடையவும் உதவியை மன்றாடி, அதிகாரத்தோடு அலைகளுக்குக் கட்டளையிடவே அலைகள் அமர்ந்து சிசிலியா தீவின் தாவோர்மினா பட்டணத்தின் கரையோரங் கப்பல் சேர்ந்தது. கப்பலை விட்டிறங்கி இரண்டு மாத காலம் அவ்விடந் தங்கியிருந்த போது கிணறொன்றெடுக்க செய்தார். அக்கிணற்று நீரால் இக்காலத்திலும் அநேக நோயாளிகள் செளக்கியமடைந்து வருகிறார்கள். அவர் கையால் நட்ட எலுமிச்சஞ் செடி இப்போதும் வருஷா வருஷம் பூத்துக் காய்த்து வருகின்றது. அவ்விடத்தினின்று அவரும் காஸ்தீல் பட்டணத்து பிலிப் என்னுஞ் சகோதரரும் {Frore Philippe de Castile) 1221-ம் வருஷம் மே மாதம் 30-ந் தேதி சம்மனசுகளின் மாதா (Notre Dame des Anges) மடத்தில் கூடின சபை சங்கத்துக்கு வந்தார்கள்.
அச்சங்கத்துக்கு வந்திருந்த அர்ச். பிரான்சிஸ்குவும் தாழ்ச்சியால் விளங்கினார். அவருடைய மாதிரியைப் பின்பற்றி வந்த அர்ச். அந்தோனியாரும் தாம் இன்னாரென்று காண்பிக்காமலிருந்ததால் மற்றெவரும் அவருடைய கோத்திரத்தின் மகிமையையும், கல்வி சாஸ்திரத் திறமையையும், புண்ணிய மகிமை பெருமையையும் அறிந்தவர்களல்ல. அச்சங்கத்துக்கு வந்திருந்த ரோமாஞா (Romagna} நாட்டின் அதிசிரேஷ்டர் அவரைத் தம்மோடு அழைத்துப் போகச் சம்மதித்து மோந்த்தே பாவோலோ {Monte Paolo) பான்னும் மடத்தில் அவரிருக்கும்படி நியமித்தார்.
அர்ச். அந்தோனியார் தம்மைக் குறித்து ஒன்றும் சொன்னவரல்ல. தமது உன்னத மாதிரியான சேசு நாதருடைய பாதத்தில் தம்மை முழுமையும் ஒப்புவித்து அவருடன் ஒன்றித்திருப்பதை மாத்திரமே தேடி வந்தார்.

அர்ச்சியசிஷ்டவர்களிடத்தில் இரண்டு வித்தியாசமான காரியங்களை நாம் கண்டறிய வேண்டியது அவசியம். நாம் கண்டு பாவிக்கவேண்டிய அவர்களுடைய புண்ணியங்கள், நாம் கண்டு ஆச்சரியப்படவேண்டிய அவர்களுடைய புதுமைகள், அர்ச். அந்தோனியாருடைய புதுமைகளை. அப்புதுமைகளைச் செய்யச் சர்வேசுரன் அவருக்குத் தந்தருளின வல்லபத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவது மல்லாமல் முக்கியமாய் அவருடைய அரிய புண்ணியங்களை நம்மாலானமட்டும் கண்டுபாவிக்கப் பிரயாசைப்படுவோ மானால் அவருடைய ஒத்தாசையை அடைவோமென்பதில் கொஞ்சமாவது சந்தேகமில்லை.

செபம்

ஓ! சிறந்த புண்ணியங்களால் விளங்கி, மேன்மை பெற்றவரான அர்ச். அந்தோனியாரே, வேதசாக்ஷ முடி அடைவதற்காக அதியாசையோடு பக்திச் சுவாலகருகி கொப்பான அர்ச், பிரான்சிஸ்கு சபையில் உட்படத் தீர்மானித்தரே. தவத்தினுடையவும் ஒறுத்தலினுடையவும் ஆசையை எங்களுக்கு அடைந்தருளக் கிருபை புரியும் – ஆமென்.

நற்கிரியை – ஒருசந்தி அனுசரிப்பது.

மனவல்லயச் செபம் – விரும்பி வேதசாட்சியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started