St. Antony Devotion in Tamil (Day 2)

நாள் 2 அர்ச். அந்தோனியாருடைய பிறப்பு

தவத்தினுடையவும் தாழ்ச்சியினுடையவும் உத்தம மாதிரியாயிருந்துவந்த இந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவர் லிஸ்போன் (ஸிஷ்விணுலிஐஐள)’ நகரத்தில் கோத்புரு தெ புய்யோன் (றூலிdளக்ஷூrலிதீ ழி யலிற்ஷ்யியிலிஐ) சந்ததியாருடைய அரண்மனையில் 1195-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பிறந்தார். அவருடைய தாயாரான தெரேஸ் (ம்லிமிழி வீஜுளrளவிழி) துரைசாளி அஸ்தூரியா (புவிமிற்rஷ்ளவி} தேசத்து இராச குலத்திற் பிறந்தவள். அர்ச். தேவ மாதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட லா சே (ஸிழி $ள) பட்டணத்து தேவாலயத்துக்கு மேற்புறத்தில் அவர் பிறந்த அரண்மனை கட்டப்பட்டிருந்தது.
ஞான மாடப்புறாவைப் போலக் கற்சந்துகளில் இல்லிடந் தேடி, அக்காலத்தில் காடாகவும் தனித்துமிருந்த பிரிவ் (யrஷ்ஸள) பட்டணத்தையடுத்த கெபிகளில் (றூrலிவிவிளவி) வசிக்கப் பிரியங்கொண்டு, பாறையின் ஓரங்களினின்று துளித்துளியாய்க் கசிந்த நீரைச் செட்டா யுதவிக்கொள்ளத் தமது மிருதுவான கரங்களால் . பள்ளந் தோண்டினவர் ராஜ ஐசுவரியத்தினுடையவும் ஆடம்பரத்தினுடையவும் மத்தியில் பிறந்தார்,
பிறந்தவுடனே ஞானஸ்நானத்துக்குக் கொண்டு போகப்பட்டு அச்சமயத்தில் பெர்நாந்தோ என்னும் பெயர் சூட்டப்பட்டார், சிறு பிராயத்தின் பொழுதே உலக ஆஸ்திபாஸ்திகளையும் பெருமை சிலாக்கியங்களையும் காலில் மிதித்து பரலோகத்தையும் நித்தியத்தையும் நாடிச் சேர்ந்த பிறகு அவர் தண்ணீரைக்கொண்டு செய்தருளிய அற்புதங்களில் பிராதனமானவைகளின் குறிப்புகளைக் கல்விழைத்த தகடுகளிலெழுதி அத்தகடுகளால் அவர் நானஸ்நானம் பெற்றவிடத்திலிருந்த தொட்டியை மூடினார்கள், அவருடைய தாயார் தெரேசாள் தன் கோத்திர மேன்மையினாலும், அழகினாலும் சிறந்திருந்தது போலவே புண்ணியத்தினாலும் சிறந்திருந்தாள். புண்ணியவதியான தாயுடைய பாலுடனும் கொஞ்சுதலுடனும் குழந்தைக்குப் புண்ணிய நடத்தை ஊட்டப்படுகிறதென்கிறார் சாஸ்திரியொருவர், தாயின் மடியிலேயே சேசு மரியெனவும், பிரிய தத்த மந்திரஞ் சொல்லவும் பெர்னாந்தோ கற்றுக்கொண்டார். ‘ஓ மகிமை பொருந்திய ஆண்டவளே” (க்ஷிதீதுஐள ஞி றூயிலிrஷ்லிவிழி ம்லிதுஷ்ஐழி.) என்னும் பாடலைக்கொண்டு அவருடைய தாயார் அவரைத் தாலாட்டினாள். சிறு பிள்ளைகள் அழுவதிலும் ஆடுவதிலும் ஓடுவதிலும் காலத்தைக் கடப்பது வழக்கமாயிருக்க, பெர்னாந்தோ என்பவர் செபம் செய்வதிலும், கோயில்களைச் சந்திப்பதிலும், தரித்திரருக்குத் தாராளமான பிச்சை கொடுப்பதிலும் பிரியங் கொண்டார். அர்ச். அந்தோனியாருக்குத் தோத்திரமான பாடலில் சொல்லப்பட்டிருப்பதாவது: “கிறிஸ்துவின் ஊழியரான அந்தோனியாரே, மனங் களிகூரும், உமது சிறு பிராயமுதலே உம்மை நிரப்பின ஆண்டவருடைய கருணையானது மோக்ஷ பாதையை நீர் நாடும்படி செய்தது’ என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ,
வாலிப ஸ்திரிகளே, வாலிபத் தாய்மாரே, சிறு பாலகர் உங்கள் கரங்களிலிருக்கையில் எவ்வளவோ ஆனந்த சந்தோஷமடைகிறீர்கள். உங்கள் பிள்ளைகள் மட்டில் உங்களுக்குண்டான ‘ கடமைகளை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் வேதத்தைப் படிப்பித்து மோக்ஷ வழி காட்ட வேண்டியவர்கள் நீங்களே, அந்த இளகலான மெழுகை உருவாக்குவதும், சேசுமரியென்னுந் திரு நாமங்களை அதில் பதியவைப்பதும் உங்களுடைய கடமையல்லவோ! உங்களிடத்தினின்றல்லவோ, உங்களுடைய மாதிரியைக் கண்டல்லவோ, குழந்தைகள் தங்கள் கரங்களைக் குவித்து செபிக்கவும், சிலுவையடையாளம் வரையவுங் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தைகளைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுத்து அவளுடைய ஆதரவில் வையுங்கள். ஞானஸ்நானம் பெற்ற முதலே அவர்களை அர்ச். அந்தோனியாருடைய அடைக்கலத்தில் ஒப்புவித்து விடுங்கள். சிறு குழந்தையான அந்தோனியாரைப்போல உங்கள் குழந்தைகளும் பிச்சைகொடுக்கும்படி பழக்குங்கள், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் அவிசுவாசிகள் ஆகக் கூடும். நன்னெறியை விட்டுவிடக்கூடும். ஆனால் அரிசி, அந்தோனியாருடைய ஒத்தாசையால் தங்களுடைய சிறு பிராயத்தில் உங்கள் மடி மேல் வளர்ந்த காலத்தில் தாங்கள் கற்றுக்கொண்ட செபங்களை, கேட்ட புத்திமதிகளை, பார்த்த நன்மாதிரிகளை, தாங்களே செய்துவந்த தர்மங்களை நினைப்பார்கள், நல் வழி திரும்புவார்கள். நீங்கள் இவ்வுலகத்தில் அருமையாய் நேசித்த பிள்ளைகள் மறுவுலகத்திலும் உங்களோடு நித்தியத்துக்கும் வாழும் பாக்கியத்திற் சேர்வார்கள்.

செபம்

மகா மகிமை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, நீர் தேவமாதாவினுடைய ஆதரவிற் பிறந்து, உமக்கு ஐந்து பிராயமாகும் போதே உமது கற்பென்னும் ஒலிப் புஷ்பத்தை அத்திரு மாதாவுக்கு ஒப்புக்கொடுத்தவரே, கல்லிலே உமது விரலாற் பதிக்கப்பட்ட சிலுவையடையாளத்தைக் கொண்டு பசாசை துரத்தினீரே, அத்திரு மாதாவின் மட்டில் உருக்க மான பக்தியையும், நரக சத்துராதிகளின் தந்திரங்களை வெல்ல பலத்தையும் எங்களுக்கு அடைந்தருளும். ஆமென்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started